மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை: குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து

தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று முன்தினம் வரை வறண்டு காணப்பட்ட அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்த அனலின் தாக்கம் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்ட நிலையை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த திடீர் மழை காரணமாக அருவிகளில் நேற்று காலை முதல் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்திலும் குறைவாக தண்ணீர் விழுந்தது. கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்படுகிறது….

Related posts

சார்பதிவாளர் ஆபீசில் அங்கீகாரமற்ற 90 வீட்டுமனை பதிவு அம்பலம்

கட்சியை டேமேஜ் ஆக்கியது ஆருத்ரா மோசடி குழந்தைக்கு ஆருத்ரன் என்று பெயர் சூட்டிய அண்ணாமலை: நிர்வாகிகள் அதிர்ச்சி; வெடித்தது புதிய சர்ச்சை

பஸ்கள் மோதல் மாணவர்கள் உள்பட 95 பேர் காயம்