மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். முதல் பிரிவில் 1-வது அலகு மட்டும் செயல்பட்டு வருகிறது. இதில் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3 மற்றும் 4வது அலகுகளில் மின் தேவை குறைவு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் கொதிகலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. 1440 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தற்போது 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது….

Related posts

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்