மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: பவானி கரையோர கிராமங்களில் புகுந்த வெள்ளம்

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது 1.25 லட்சம் கனஅடிஆக உள்ளது. தற்போது அந்த நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரவும் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தப்பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதில் தங்கியிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 2 முறை இதேபோல் காவிரி ஆற்றில் அதிக நீர் வெளியேற்றப்பட்ட்ட போது அதிக அளவிலான வெள்ள நீர் பவானி நகரில் உள்ள வீடுகளில் சூழ்ந்தது. தற்போது 3-வது முறையாக வெள்ள பேருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் அந்த பகுதில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். …

Related posts

டாக்டர் காந்தராஜிடம் போலீசார் விசாரணை

ராகுல்காந்தி குறித்து அவதூறு பேச்சு என்னுடன் எச்.ராஜா நேரில் விவாதிக்க தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்: முதல்வர் பதிவு