மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக நீடிப்பு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 4வது நாளாக இன்று 12,500 கனஅடியாக தொடர்கிறது. டெல்டா பாசனத்திற்கு பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்,  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி