மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் 16 கண் மதகு மூடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி ஒருலட்சம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துவருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 18 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், 17வது நாளாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 28,203 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் 16 கண் மதகு மூடப்பட்டுள்ளது….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்