மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

குன்னூர்:  கோடை சீசன் நிறைவடைந்ததும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில்  கடந்த 2 மாதங்களாக கோடை சீசன் நடைபெற்று வந்தது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது கோடை சீசன் முடிந்ததால் வாகனங்கள் வழக்கம்போல இருவழி பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மலைப்பாதையில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்