மேகம் அள்ளி கொட்டியதும்… மேகநாத் மெல்ல ‘‘குட்டியதும்…’’‘‘விருதுநகர்ல மழை பெய்யுது சார்… லீவு? விடுமுறை தர்றேன்… வீட்டுப்பாடம் படி’’: மாணவருக்கு கலெக்டர் அனுப்பிய ட்விட் வைரல்

விருதுநகர்: தமிழகத்தில் தொடர் மழை பெய்வதால் மக்கள் ஒருபுறம் அவதியடைந்தாலும், மறுபுறம் ‘நாளைக்கு ஸ்கூலு இருக்கா? இல்லையா?’ – என மாணவர்களின் புலம்பல் மாவட்டந்தோறும் பல வீடுகளில் ஒலிக்கிறது. வீட்டுல மட்டுமா? ஒரு மாணவர், நேரடியாக ட்விட்டரிலேயே கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத் ரெட்டி. இவருக்கு ட்விட்டரில், ‘‘‘‘மழையால் திருவாரூர் மாவட்டத்துக்கு லீவு விட்டுட்டாங்க.  விருதுநகர் மாவட்டத்திலும் ரொம்ப மழை பெய்யுது சார்’’’’ என்று மாணவர் விஜய்சிவா விஷ்ணு கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த கலெக்டர் மேகநாத் ரெட்டி, ‘‘‘‘விடுமுறைக்காக உன்னுடைய தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு நன்றி. நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது தம்பி. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு 26.11.2021ம் தேதி மட்டும் விடுமுறை. இந்த விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி வீட்டு பாடத்தை முடி. ஆசிரியர்கள் சரி பார்ப்பார்கள். பாதுகாப்பாக இரு’’’’ என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதற்கிடையில், இதே மாணவரான விஜய்சிவா விஷ்ணு, நவ. 10ம் தேதியன்று மழையால் மாவட்டத்திற்கு பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், ட்விட்டரில், ‘‘ நவ. 11ம் தேதிவிருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்படுமா?’’’’ என்று பதிவிட்டார். மாணவரின் இந்த பதிவைக் கண்ட கலெக்டர், ‘‘‘‘விடுமுறை இல்லை தம்பி… பள்ளிகூடம் போ. சூரியன் வெளியே வந்து விட்டது. படி… விளையாடு, மகிழ்வாய் இரு… நம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமென சாமியை கும்பிட்டுக்கோ’’’’ என்று பதிலை முடித்துவிட்டார்….

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு