மேகதாது அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக அரசும் காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தன்னாட்சி பெற்ற அதிகாரம் அளித்த நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மத்திய அரசு, அதற்கு ஒரு நிரந்தர தலைவரை கூட நியமிக்காமல் உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தடை விதிக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை