மெரினா கடல் நடுவே 134 அடி உயரத்தில் கலைஞர் பேனா நினைவு சின்னம்: ₹80 கோடியில் அமைகிறது

சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நினைவை போற்றும் வகையில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு₹80 கோடியில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது.மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில்₹39 கோடியில் அரசு சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.  அதில்,  முத்தமிழ் அறிஞர் நினைவைப் போற்றும் வகையிலும், அவரின் எழுத்து திறனை  நினைவுகூரும் வகையிலும்,  உதயசூரியன் வடிவில் அமைக்கப்படும் முகப்பு  பகுதியில்  இந்த பேனா வடிவ பிரமாண்ட தூண்  ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த  நினைவிடத்தில் கலைஞரின்  வாழ்க்கை, சிந்தனை குறித்த  நவீன  ஒளிப்படங்களும் பொதுமக்கள் பார்க்க வசதியாக அமைக்கப்படுகிறது. விரைவில் கட்டுமானப்பணி முடிவடைந்து திறக்கப்பட உள்ளது. கடலின் நடுவே₹80 கோடியில் பெரிய அளவிலான பேனா வடிவம் ஒன்று 134  அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. அதாவது, கலைஞர் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தள்ளி கடலில் இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைய உள்ளது. இதை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலைஞர் நினைவிடத்தில் இருந்து பின்புறமாக கடல் பகுதியை நோக்கிய நுழைவாயில் அமைத்து  அதன் வழியாக பார்வையாளர்கள் கடலின் மேல்பகுதியில் நடந்து செல்ல 650 மீட்டர்  நீளத்துக்கு  இரும்பு பாலம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பாதை கண்ணாடியில் அமைக்கப்பட உள்ளது. அதனால் பார்வையாளர்கள் கடல் நீரையும் பார்த்தபடியே செல்ல முடியும். இது கடல் மட்டத்தில்  இருந்து 360 மீட்டர் உயரமும், தரை மட்டத்தில் இருந்து 290 மீட்டர் உயரமும் இருக்கும். கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பில் இந்த கண்ணாடி பாலம் அமையும். இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து சென்று பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை பார்த்து ரசிக்க முடியும். இந்த பிரமாண்டமான கட்டுமானத்திற்கு ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என்று பெயரிடப்படும். இதற்காக₹80 கோடி செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.  மும்பையில்  சத்ரபதி சிவாஜிக்கு மகாராஷ்டிரா அரசு  அரபிக் கடலின் உள்ளே நினைவுச் சின்னம் கட்டி வருகிறது. அதுபோல தமிழகத்தில் கலைஞருக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஒன்றிய மற்றும் மாநில அளவிலான கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்தின்  முன்மொழிவுகள்  பெறப்பட்டுள்ளது.  கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின்  அனுமதியைப் பெற இதற்கான திட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட உள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை