மெப்கோ பொறியியல் கல்லூரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

சிவகாசி, ஏப்.4: மாணவர்களின் அறிவாற்றலையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 495 மாணவர்களுக்கு ரூ.74.5 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். கல்லூரி தாளாளர் டென்சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சிங்காரவேல் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற புது டெல்லியைச் சேர்ந்த டிஆர்டிஓ குழுமத்தின் இயக்குனர்கள் ஜெயசாந்தி, பால் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அறிவழகன் பேசுகையில், ‘‘கடந்த காலங்களில் இந்த கல்வி ஊக்கத்தொகை நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து முயற்சி செய்தால் அனைவரும் இந்த ஊக்கத்தொகையினை பெற முடியும்’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வரின் தனிச்செயலாளர் முனைவர் மாதவன் நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை