மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்

 

சென்னை, ஜூலை 6: மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே இன்று முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் பெரம்பூர் மார்க்கெட் அருகில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வரை 2 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:
 மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு மற்றும் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் இருந்து ஜவஹர் சாலை நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் சுப்பிரமணியம் தெருவில் திரும்பி, வீர சவார்க்கர் சாலை வழியாக செல்லலாம்.
 அதேபோல், ஜவஹர் சாலையில் உள்ள மேற்கு தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் ஜீவானந்தம் தெரு ஆகியவை மூடப்படும். இந்த தெருக்களில் இருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 கம்பர் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹர் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கம்பர் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் கவுதமர் தெரு மற்றும் அசோகர் தெரு வழியாக ஜவஹர் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 ரமணா நகர் மெயின் தெருவில் இருந்து ஜவஹர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, எஸ்எஸ்வி கோயில் சாலை மற்றும் வீர சவார்க்கர் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி