மூளைச்சாவு அடைந்த தையல் தொழிலாளியால்8 பேருக்கு மறுவாழ்வு

கோவை: கோவை  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை (51). தையல் தொழிலாளி. கடந்த 6ம் தேதி டூவீலரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயம்  அடைந்தார். கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம்தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. டாக்டர்கள் அறிவுரையின்படி, அவரது  உடல் உறுப்புகளை தானம் செய்ய, மனைவி, மகன், மகள் முன்வந்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின்  அனுமதியுடன் அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும்  எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதன்மூலம், 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். …

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்