மூத்த தலைவர்களுக்கு சீட் இல்லை; பாஜகவுக்கு வழங்கிய 20 தொகுதி உத்தேச பட்டியல்: புதியவர்களுக்கு சீட்டுகளை வாரி வழங்கினர்

சென்னை: பாஜகவில் தலைவர்களுக்கு ஏற்றார்போலத்தான் அதிமுக கூட்டணியில் தொகுதிகளை கேட்டு வாங்கினர். அதில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கே சீட் கேட்டு வாங்கியதால் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதியவர்களிலும் பல பேருக்கு சீட் கொடுத்தால் வளர்ந்து விடுவார்கள் என்ற பயத்தில் சீட் ெகாடுக்காமல் விட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் 40 தொகுதியாவது வேண்டும் என்றனர். ஆனால் அவர்களுக்கு 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் டெல்லி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தமிழக தலைவர்களோ, நாம் நோட்டாவை முந்துவதே கடினம். அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால்தான் டெபாசிட்டாவது கிடைக்கும் என்று கூறி கொடுத்ததை வாங்கிக் கொண்டனர். அதில் சமீபத்தில் கட்சிக்கு வந்த விஐபிக்களுக்கு மட்டுமே சீட் வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக வாங்கிய 20 தொகுதிகளின் பட்டியல்கள் தற்பாது வெளியாகியுள்ளன. அதில், ஆயிரம்விளக்கு, துறைமுகம், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, மதுரை வடக்கு, மொடக்குறிச்சி, ராமநாதபுரம், திருக்கோவிலூர், திட்டக்குடி(தனி), நெல்லை, காரைக்குடி, தளி, அரவக்குறிச்சி, உதகமண்டலம், தாராபுரம், திருவண்ணாமலை, விருதுநகர் (அ)ராஜபாளையம், திருவையாறு(அ)தஞ்சை ஆகிய தொகுதிகளை கேட்டு வாங்கியுளளனர்.முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலைக்கு அரவக்குறிச்சியும், நடிகை குஷ்புவுக்கு ஆயிரம்விளக்கு, நெல்லை தொகுதி நயினார் நாகேந்திரனுக்கும், தஞ்சை(அ) அரவக்குறிச்சி கருப்பு முருகானந்தத்திற்கும், துறைமுகம் வினோஜ் செல்வத்திற்கும் கேட்டு வாங்கியுள்ளனர். அதைத் தவிர எச்.ராஜாவுக்கு காரைக்குடியும், வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு வாங்கியுள்ளனர். திருவண்ணாமலையில் தணிகைவேல், தளி(அ) ஓசூரில் நரேந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருசிலர் மட்டுமே பழைய கட்சியினர். அதிகமானவரகள் கட்சிக்கு புதியவர்கள்தான். இதனால் பழைய கட்சியினர் பலரும் சீட் கேட்டு மோதினர். அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்களுக்காக யாரும் சீட் கேட்கவில்லை. அதேபோல, சமீபத்தில் கட்சியில் சேர்ந்த வக்கீல் சங்க முன்னாள் தலைவர் பால்கனகராஜூக்கு திருவொற்றியூர் வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். வேளச்சேரிக்கு கராத்தே தியாகராஜனுக்கும் வாங்கித் தருவதாக கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் தொகுதிகளை வாங்கிக் கொடுக்கவில்லை. அதேபோல சென்னை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பழைய கட்சியினர் ஒருவருக்கு கூட சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜகவின் கொள்கைகள் என்ன? கோட்பாடுகள் என்ன? என்று கூட தற்போது சீட் வாங்கி போட்டியிடுகிறவர்களுக்கு தெரியாது. பாஜக என்றால் மோடி என்பது மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு கட்சிக்கு வந்து சீட் வாங்கிக் கொள்கின்றனர் என்றும் பலர் புலம்புகின்றனர்.ஆனாலும் தற்போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…