மூதாட்டி தீக்குளித்து சாவு

சேந்தமங்கலம், மார்ச் 14: எருமப்பட்டி அருகே, அம்பாயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி மனைவி துளசி(70). இவர் கடந்த சில மாதங்களாக, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசி, நேற்று முன்தினம் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் கருகி படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, துளசி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு