மூணாறில் நாய் கடித்து மூன்று பசு சாவு

 

மூணாறு, செப். 11: கேரளா மாநிலம் மூணாறில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் தங்கள் இதர வருமானத்திற்காக பசுக்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மூணாறு அருகே உள்ள பெரியவாரை எஸ்டேட் ஆனைமுடி டிவிஷனில் திங்கட்கிழமை காலை தர்மராஜா என்பவரின் இரண்டு பசு, மாரிசாமி என்பவரின் ஒரு பசு நோய் வாய்ப்பட்டு இறந்தன.

மேலும் அதே பகுதியில் ஒரு பசு இந்த நோய் தாக்குதலின் அறிகுறியுடன் உள்ளது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கால்நடை மருத்துவரிடம் கூறியுள்ளனர். பின்னர் கால்நடை மருத்துவர் நடத்திய பரிசோதனையில் பசுக்கள் இறப்புக்கு நாய் கடித்தது தான் காரணம் என்று தெரிய வந்தது.

இதைக் கேட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் பசுக்களை நாய் கடித்து குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்று தொழிலாளர்கள் கூறினர். ஆனால் உள்ளூர் வாசிகள் சிலர் நாய் அப்பகுதியில் சுற்றுவதை கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்