மூணாறில் காரை அடித்து உடைத்த காட்டு யானை கூட்டம்

மூணாறு, ஏப்.17: கேரள மாநிலம் மூணாறில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை யானை கூட்டம் அடித்து நொறுக்கியது. தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான குட்டியார் எஸ்டேட்டில் நேற்று முன்தினம் இரவு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை கூட்டமானது, அப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்த வாழை, கோஸ் போன்றவற்றை தின்று விளைநிலங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

மேலும் அப்பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இந்த இரண்டு கார்களும் டிராவல்ஸ் நடத்தி வருபவருக்கு சொந்தமான கார்கள் என கூறப்படுகிறது. இதனால் வனத்துறை மற்றும் அரசு தனக்கு நஷ்டஈடு வழங்க என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை சிறப்புக் குழு காட்டு யானை கூட்டத்தை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்