மூட நம்பிக்கையில் இந்திய பெண்கள்: ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை

ஜெய்பூர்: ‘சீனா, அமெரிக்க பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள்; ஆனால் இங்குள்ள பெண்கள் கணவனுக்காக சல்லடை மூலம்  நிலவை பார்க்கிறார்கள்’ என்று ராஜஸ்தான் அமைச்சர்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த ‘டிஜிபெஸ்ட்’ என்ற நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் கோவிந்த் ராம் மெக்வால் பேசுகையில், “சீனாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள்; ஆனால் இன்றும் இங்குள்ள பெண்கள் கர்வ சவுத் பண்டிகையின் போது சல்லடை மூலம் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக நிலா பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஒரு கணவன் தன் மனைவியின் நீண்ட ஆயுளுக்காக சல்லடையைப் பார்ப்பதில்லையே. பிறரை மூடநம்பிக்கைகளுக்குள் தள்ளுபவர்கள், ஜாதி, மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்கள்’’ என்றார்.   இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார்.  பெண்களை மரியாதை குறைவான  கருத்துக்களை கூறிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோவிந்த்ராம் விளக்கம் அளிக்கையில், ‘‘கர்வா சவுத் பண்டிகைக்கு நான் எதிரானவன் அல்ல. மக்களிடம் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அவ்வாறு பேசினேன்’’ என்றார்….

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு