மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்: உங்கள் அறிவிப்பு தான் விவசாய கடன் தள்ளுபடிக்கு காரணம்

சென்னை: தமிழகத்தில் இப்பருவ ஆண்டில் பெய்த பெருமழையால் விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அறுவடை செய்யும் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி, தமிழகம் முழுவதும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இச்சமயத்தில், விவசாயிகள் நிர்கதியாக கைவிடப்பட்ட நிலையில், கூட்டுறவு கடன்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் என முழுமையாக தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினார்கள். இச்சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராகிய தாங்கள், விவசாயிகள் மீது கொண்ட அன்பால், நான் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்தீர்கள். இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை வாய்மூடி இருந்த தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். எப்படியோ, இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றியை செலுத்துகிறோம்..” என்று கூறி நன்றி தெரிவித்தனர்….

Related posts

அக்டோபரில் யு-வின் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்