முழுஊரடங்கு அமலில் இருப்பதால் சத்தியமங்கலத்தில் சம்பங்கி மலர்களை சாலையில் கொட்டும் நிலை

ஈரோடு: கொரோனா பரவல் காரணமாக முழுஊரடங்கு அமலில் இருப்பதால் சத்தியமங்கலத்தில் சம்பங்கி மலர்களை சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூக்களை பறிக்காததால் மலர்ந்த பூக்கள் செடியிலேயே அழுகிவிடும் சூழல் உள்ளது. இதனால் சம்பங்கி பூக்களை பறித்து சாலையில் கொட்டி விவசாயிகள் அளித்து வருகின்றனர். பூத்துள்ள பூக்களை அப்படியே விட்டுவிட்டால் காம்பு அழுத்து விடும் என்றும் வாழ்வாதாரம், இழந்து தவிப்பதால் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட மாம்பழ கூல் தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 21 தொழிற்சாலைகள் மட்டுமே மாம்பழக்கூழ் உற்பத்தியில் ஈடுபட்டுவருவதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதால் வங்கியில் பெற்றுள்ள கடனுக்கான வட்டியில் முழுமையான விளக்கு அளிக்க வேண்டும் என்று ஆளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அச்சத்தால் கொடைக்கானலில் ஹோம்மேட் சாக்லேட் வீணாகி குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கி போனது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கொடைக்கானலில் கோடை சீசன் காலை கட்டும். அங்கு குவியும் பலஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மிதமான சூழலை அனுபவிப்பதோடு, அங்கு தயாராகும் ஹோம்மேட் சாக்லேட்களை கிலோ கணக்கில் வாங்குவர். கோடைகால விற்பனைக்காக விதவிதமாக தயாராகி இருந்த சாக்லேட்கள் அனைத்தும் தொற்று பரவல் காரணமாக வீணாகி விட்டன. …

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா