முள்ளக்காட்டில் நீர் தேக்க தொட்டி அமைக்க அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 

ஸ்பிக்நகர், ஜூலை 10: முள்ளக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நீர் தேக்க தொட்டி அமைய உள்ள இடத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீர்த்தேக்கதொட்டி அமைத்துக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி அமைத்து கொடுப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து முள்ளக்காடு பகுதியில் நீர் தேக்க தொட்டி அமைய உள்ள இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அப்போது மாநகரச்செயலாளர் ஆனந்தசேகரன், முள்ளக்காடு பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நிர்மல், முள்ளக்காடு சின்னராசு, சேகர், திமுக நிர்வாகி ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்