முல்லைப் பெரியாறு ரகசியங்கள் தீவிரவாதிகளுக்கு தரப்பட்டதா?: மூணாறு போலீசார் 3 பேர் இடமாற்றம்

திருவனந்தபுரம்: போலீசின்  ரகசிய விவரங்களை தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்ததாக கூறப்பட்ட  புகாரில், முல்லைப் பெரியாறு காவல் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ்காரர்  உள்பட 3 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே உள்ள கரிமண்ணூர்  போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர்  ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் குறித்த ரகசிய விவரங்களை போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் இருந்து திருடி தீவிரவாத தொடர்புடைய ஒரு  இயக்கத்திற்கு கொடுத்ததாக புகார் எழுந்தது. விசாரணையில், தீவிரவாத இயக்கத்திற்கு ரகசிய விவரங்களை அனஸ் கொடுத்தது உறுதி  செய்யப்பட்டது. இதையடுத்து, 2 மாதங்களுக்கு முன்பு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக போலீசார்  நடத்திய தொடர் விசாரணையில், மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில  முக்கிய ரகசிய விவரங்கள் சில தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுக்கப்பட்டது  தெரிந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி மூணாறு டிஎஸ்பி மனோஜுக்கு  அப்போதைய எஸ்பி கருப்பசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்  கிடைத்தன. போலீசாரின் பல முக்கிய ரகசிய விவரங்கள், மூணாறு போலீஸ் நிலைய  கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. இதை கடந்த மே  15 ம் தேதி யாரோ தங்களுடைய செல்போனில் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இதை செய்தது அதே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது என்பது தெரிந்தது. அவர்களின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், கம்ப்யூட்டரில் இருந்து ரகசிய  விவரங்கள் பதிவு செய்யப்பட்டது உறுதியானது. இதை தொடர்ந்து, இந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி இடுக்கி மாவட்ட எஸ்பி.யிடம்  டிஎஸ்பி மனோஜ்  அறிக்கை தாக்கல்  செய்தார். அதன்படி, 3 பேரையும் முதல் கட்டமாக இடமாற்றம் செய்ய  உத்தரவிடப்பட்டு உள்ளது. இவர்களில் அலியார், பல மாதங்களாக முல்லைப்  பெரியாறு அணையின் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டார். எனவே, இவர் அணை  குறித்த விவரங்களையும் தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்திருக்கலாம் என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று  வருகிறது. 3 போலீசார் மீதும் தற்போது முதற்கட்ட நடவடிக்கைகள்தான்  எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் துறை ரீதியாக மேலும் பல  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது….

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு