‘முறைமாமனோட டான்ஸா ஆடுற’ மணமகளுக்கு ‘பளார்’ விட்டார் மணமகன்: கடுப்பில் முறைமாமனையே மணந்தார் பண்ருட்டி அருகே பரபர

பண்ருட்டி:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி இளம்பெண்ணிற்கும் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நேற்று பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு விழா நடந்தது. அப்போது இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடினர். மணப்பெண்ணின் முறைமாமனும் உறவினர் வற்புறுத்தலால்  நடனம் ஆடி உள்ளார். திருமண வரவேற்பு விழாவில் மணமகன், மணமகள் அமர்ந்திருந்தனர். ஆட்டம், பாட்டம் நீண்ட நேரமாக நீடித்தது. அப்போது, மணப்பெண்ணின் தோழிகள் நீயும் நடனமாட வா என அழைத்துள்ளனர். முதலில் தயங்கிய அவர் பின்னர் மேடையில் இருந்து எழுந்து சென்று நடனமாடினார். இதில் மணப்பெண் தனது முறைமாமன் உறவு முறையை சேர்ந்தவருடன் ஒரு பாடலுக்கு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இதனை பார்த்து மணமகன் அதிர்ச்சியடைந்தார். அவர் எழுந்து சென்று  ஏன் இதுபோல் நடனம் ஆடுகிறாய் என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குகள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பெரும் பிரச்னையாக மாறியது. இரு வீட்டாருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   அப்போது, ஆத்திரத்தில் இருந்த மணமகன் திடீரென மணமகள் கன்னத்தில் அறைந்தார். இந்த திடீர் தாக்குதலால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி அடித்தால் திருமணத்திற்கு பிறகு மணப்பெண் நிலை என்னவாகும் என கேட்டனர். இதில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பெண்ணும், பெண் வீட்டாரும் திருமணத்தை நிறுத்தி விட்டு, மண்டபத்திலிருந்து வெளியேறினர். நிச்சயிக்கப்பட்ட அதேநேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என பெண் வீட்டார் முடிவு செய்தனர். இதையடுத்து, மணப்பெண்ணின் முறைமாமன், பெற்றோர் சம்மதத்துடன் அந்த பெண்ணை மணக்க சம்மதித்தார். இதையடுத்து திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு