முறைகேடு புகாரில் சிக்கிய பல்கலை துணை வேந்தர் ‘டிஸ்மிஸ்’ – உ.பி ஆளுநர் நடவடிக்கை

புதுடெல்லி: முறைகேடு புகாரில் சிக்கிய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பணிநீக்கம் செய்து உத்தரபிரதேச ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அசோக் குமார் மிட்டல் மீது முறைகேடு புகார்கள் எழுந்ததால், அவர்களை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திெபன் படேல் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில், ‘உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக் குமார் மிட்டல் மீது கூறப்பட்ட முறைகேடுகள் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கு ஆளான அசோக் குமாரை ஆளுநர் பணி நீக்கம் செய்துள்ளார். அவருக்குப் பதிலாக லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது