முருங்கையில் மதிப்பு கூட்டல் பயிற்சி

 

சின்னமனூர், ஜூலை 2: சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு முருங்கையில் மதிப்புக் கூட்டல் குறித்து இலவச பயிற்சி சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய சேர்மன் பச்சைமால் தலைமையில் நடந்தது. சின்னமனூர் பகுதிகளில் வெளிநாட்டிற்கு அனுப்பும் முருங்கை அதிகளவு உற்பத்தி செய்வதால் அதற்கு மதிப்புக் கூட்டப்பட்டு தயாரிக்கும் பொருட்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

தோட்டக்கலை திட்டங்கள் பற்றியும், காந்திகிராம பல் கலைக்கழக வேளாண் விரி வுரையாளர்கள் பிரியங்கா, முனைவர்.மாரியம்மாள் ஆகி யோர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். முருங்கைத் தொழில் முனைவோர் ரஞ்சித்குமார் முருங்கை மற்றும் முருங்கைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற் கான வழிமுறைகள் குறித்து பேசினார்.

மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ரம்யாசிவசெல்வி முருங்கை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார். பங்கேற்ற விவசாயகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனி மாவட்டத்தை சார்ந்த 35 விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயடைந்தனர். மனையியல் தொழில் நுட்ப வல்லுநர் ரம்யா நன்றி கூறினார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை