மும்மூர்த்தி நகர் பகுதியில் பாறைக்குழி-பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஆய்வு

 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டு மும்மூர்த்தி நகரில் பாறைக்குழி மற்றும் தங்கமாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும், பாதாள சாக்கடை கால்வாய் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது பாறைக்குழியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மண்டல தலைவர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் வெள்ளைசாமி, கவுன்சிலர் வேலம்மாள் காந்தி, தாமோதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்