மும்பை தாக்குதல் தீவிரவாதிகளின் சொத்து விவரத்தை சேகரிக்கும் பாக்.: பஞ்சாப் மாகாண அரசுக்கு உத்தரவு

லாகூர்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சொத்து விவரங்களை அளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு  பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக  மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதில், 300 பேர் பலியாயினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதில் 9 தீவிரவாதிகளை போலீசார் சுட்டு கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் துாக்கிலிடப்பட்டான்.  மும்பை தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்்த  தாக்குதல் நடைபெற்று  14 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட யாருக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது  இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.  லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த அம்ஜத் கான், இப்திகர் அலி,சாகித் கபூர், முகமது உஸ்மான், அதிக்கியூர் ரஹ்மான், ரியாஸ் அகமது, முகமது முஸ்தாக்,  முகமது நயீம்,அப்துல் சக்கூர், முகமது சபீர், சகீல் அகமது, அப்துல் ரஹ்மான் ஆகியோர்  தீவிரவாதிகள் மும்பை செல்வதற்கான படகு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இப்போது, இந்த வழக்கை துரிதப்படுத்தி உள்ள பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு, இதில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சொத்து விவரங்களை தருமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்ட  ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையது , லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான ஜக்கியூர் ரஹ்மான் லக்வி, வேறு சில வழக்குகளில் ஏற்கனவே கைதாகி லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு-பாக். தொடர்புஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான  ஒன்றிய அரசின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, ‘‘ஆப்கானிஸ்தானில் மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் அதன் சுற்றுப்புறங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் பாகிஸ்தானின் லஷ்கர் இதொய்பா, ஜெய்ஸ் இ முகமது போன்ற  தீவிரவாத குழுக்களுடன் உள்ள தொடர்பு குறித்து  ஐநா பொது செயலாளரின் அறிக்கையில் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.பாகிஸ்தான் எதிர்ப்புசமீபத்தில் சீனா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த நாட்டுடன்  பொருளாதார பாதை திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பாக இம்ரானும், சீன அதிபர் ஜின்பிங்கும் வெளியிட்ட கூட்டறிக்கையில். இந்த திட்டம் காஷ்மீர் வழியாக செல்வதாக தெரிவித்தனர். இதற்கு ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான்- சீனா கூட்டு அறிக்கை தொடர்பாக இந்திய வெளியுறவு துறை தெரிவித்த கருத்துகள் அபத்தமானது, தேவையற்றது. காஷ்மீரிகளின் போராட்டத்துக்கு பாகிஸ்தான் தன்னுடைய ஆதரவு அனைத்தையும் வழங்கும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை