முப்பெரும் சட்டத்தை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

கரூர், ஜூன் 22: முப்பெரும் சட்டத்தை திரும்ப பெற கோரி கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முப்பெரும் சட்டங்களின் பெயர்களை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதையும், சட்டத்தை அமல்படுத்தும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுககு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, மாயனூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு