முன்விரோத தகராறில் தாக்குதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு கொலையா? தம்பதியிடம் விசாரணை

பண்ருட்டி, ஜன. 9: பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். பொக்லைன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் இவரது தம்பி வீரன். கூலிதொழிலாளி. இருவருக்கும் இடையே இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 11ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் வீரன் மனைவி கஸ்தூரியை (30) வீரபத்திரன், இவரது மனைவி ஷர்மிளா, வீரபத்திரனின் தந்தை சக்கரபாணி ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ெபற்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார், வீரபத்திரன், ஷர்மிளா, சக்கரபாணி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வீரபத்திரன், இவரது மனைவி ஷர்மிளாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்