முன்விரோதத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்

உடன்குடி, ஜன. 6: மெஞ்ஞானபுரம் அருகே சீர்காட்சி அம்மன்புரம் சூரியகாந்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி ஸ்டெல்லா(55). தம்பதியினர் அம்மன்புரம் பஸ்ஸ்டாப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஊரை சேர்ந்த சின்னத்துரை மகன் முருகானந்தன்(25), பஸ்ஸ்டாப் பகுதியில் மது குடித்துள்ளார். இதனை டீக்கடைக்காரர் சின்னத்துரை கண்டித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்படவே டீக்கடை சின்னத்துரை மகன் ரமேஷ் தட்டிக்கேட்டார். இதில் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், கடந்த 31ம் தேதி ரமேசிடம் முருகானந்தன் தகராறு செய்து கறுக்கு மட்டையால் தாக்கினார். தடுக்க சென்ற அவரது தந்தை சின்னத்துரையையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் எஸ்ஐ விஜயதாஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு