முன்னேற்பாடுகள் குறித்து தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 9: நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணிக்கான எழுத்து தேர்வு, இன்று 174 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 51 ஆயிரத்து 433 தேர்வர்கள் எழுதுகிறார்கள். தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார், போட்டித்தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் நிலை கருவூலத்தில், நாமக்கல் கலெக்டர் உமா, தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர், தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து முதன்மை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, தேர்வுக்கு பயன்படுத்தக்கூடிய வினாத்தாள்கள் வைப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை