முன்னாள் மாணவர்கள் சார்பில் கே.ஜி.கண்டிகை அரசினர் பள்ளியில் ரூ. 3.50 லட்சத்தில் கேமராக்கள் பொருத்தம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கே.ஜி கண்டிகை பகுதியில் அரசினர் மேனிலைப் பள்ளி உள்ளது. இதில்,  கடந்த, 1980ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இங்கு படித்த மாணவர்கள் தற்போது அனைத்து மாநில, மத்திய அரசுப் பணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் வாட்ஸ் ஆப் மூலமாக  ஒன்றிணைந்து  பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடிவு செய்து தீர்மானித்தனர். இதையடுத்து, முன்னாள் மாணவர்கள், பள்ளி வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், அலுவலகம் மற்றும் நூலகம் உள்பட பள்ளி முழுவதும் கண்காணிக்கும் வகையில், ரூ. 3.50 லட்சம் மதிப்பீல் 60 கண்காணிப்பு கேமிராக்கள் வாங்கி செய்து  நேற்றுமுன்தினம் பொருத்தி  உள்ளனர். இந்த கேமராக்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகத்தின் மூலம் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரில் பார்க்கும் வகையில், காணொலி திரையும் அமைத்து தரப்பட்டுள்ளது. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் பள்ளியில்  சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். அதே நேரத்தில்  மாணவர்களையும் கண்காணிக்க துணையாக இருக்கும். முன்னாள் மாணவர்கள் பள்ளியில் கேமரா பொருத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்