முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸூக்கு பிடிவாரண்ட் போட்டுவிடுவேன் என்று நீதிபதி கடும் எச்சரிக்கை

விழுப்புரம்: முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸூக்கு பிடிவாரண்ட் போட்டுவிடுவேன் என்று நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் கேட்டதால் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது. குறுக்கு விசாரணைக்காக எஸ்.பி கண்ணன், புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜரானர். குறுக்கு விசாரணைக்காக ராஜேஸ்தாஸ் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர் ரவீந்திரன் மனுத்தாக்கல் செய்தார். ஆரம்பத்தில் இருந்தே வழக்கு விசாரணைக்கு ராஜேஸ்தாஸ் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இனிமேல் ராஜேஸ்தாஸ் தரப்பில் மனு போடப்பட்டால், அவருக்கு பிடிவாரண்ட் போடப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்