Thursday, July 4, 2024
Home » முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் மரைக்காயரின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் மரைக்காயரின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

by kannappan

ராமேஸ்வரம்: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் சகோதரர் மரைக்காயரின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயர், இவரின் வயது (104) ஆகும். இவர் ராமேஸ்வரத்திலுள்ள மசூதி தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள், 2 மகன்கள். இவர்களில் தற்போது நசீமா மரைக்காயர், நெஹ்ராஜ் பேகம் ஆகிய இரு மகள்களும், ஜெய்னுலாபுதீன் என்ற மகனும் உள்ளனர். 104 வயதான முத்து மீரான் மரைக்காயர் உடல்நல குறைவு, வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார்.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.  அவரின் உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளியில் முத்து மீரான் மரைக்காயர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …

You may also like

Leave a Comment

thirteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi