முத்துலாபுரம் கிராமத்தில் மயானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை: கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை

 

தேனி, ஜூலை 2: கடமலைக்குண்டு அருகேயுள்ள முத்துலாபுரம் கிராம சமுதாய மக்களின் மயானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தேனி கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர். தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முத்தலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கோரிக்கை மனுவினை கலெக்டர் ஷஜீவினா விடம் அளித்தனர். இதுகுறித்து முத்தலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த போயர் சமூக ஊர் தலைவர் ஆறுமுகம் மற்றும் நாட்டாமை நாகராஜ் கூறியதாவது :

முத்துலாபுரம் கிராமத்தில் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றோம். எங்களுக்காக அரசு சாலை வசதி, குடிநீர், மின்சார வசதி,சுடுகாடு வசதி செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான மயானம் பகுதியை கருப்பசாமி என்பவரும் அவருக்கு ஆதரவாக இன்னும் சிலரும் ஆக்கிரமித்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் எங்களுக்கு சொந்தமான மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு, எங்களது பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமன மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதியில் நீலகிரி திமுகவினர் பிரசாரம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கன மழை கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்

குற்றங்கள் நிகழ்ந்தால் உடனே அழைக்கவும் போலீசார் ஆலோசனை