முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை, ஜூன் 21: திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொதுமக்களால் புனரமைப்பு பணி செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் 18ம் தேதி இரவு முதல் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து எடுத்து வந்தனர். அதனை வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட பெண்கள் குலவை சப்தமிட கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு ஆலய மூலவரான முத்துமாரியம்மன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டி.நாகனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு