முத்துப்பேட்டை பேரூராட்சியில் நடக்க இருந்த குளங்கள், மீன் பாசி குத்தகை ஏலம் ரத்து-ஏலதாரர்கள் ஏமாற்றம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சியில் நேற்று நடக்க இருந்த ஏலம் திடீர் ரத்து செய்யப்பட்டதால் ஏலதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.முத்துப்பேட்டை பேரூராட்சியில் நேற்று காலை குளங்கள், மீன் பாசி குத்தகை, மரங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி ஏராளமான ஏலதாரர்கள் ஏலம் எடுக்க வந்திருந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் ஏலம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்தது. இதனையடுத்து ஏலம் எடுக்க வந்தவர்கள் இது குறித்து கேட்க துவங்கினர். இதனையடுத்து திடீரென்று ஏலம் ரத்து செய்யப்பட்டதாகவும் வரும் 22ம் தேதி ஏலம் நடைபெறும் என்று வாசலில் பணியாளர்கள் நோட்டீசை ஒட்டினர். இதனால் ஏலம் எடுக்க வந்த ஏலதாரர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு