முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் சிறப்பு யோகா பயிற்சி

முத்துப்பேட்டை, ஜூன் 23: முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசு சித்த மருத்துவமனை சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. அரசு சித்த மருத்துவர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார், இதில் யோகா முறை மற்றும் யோகா பயிற்சியால் இருக்கும் நன்மைகள் பற்றியும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மரு.ஹரிஹரன் விரிவாக கூறினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி முறைகள் வழங்கப்பட்டது. இந்த வருடத்திற்கான யோகா தீர்வு பற்றியும் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செல்வசிதம்பரம், அன்பரசு, கௌதமன், இந்திரா, இளங்கோவன், முத்துலெட்சுமி, அமிர்தம், பெல்சிராணி, அமுதா உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை