முத்துப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பெண் செயலாளர் சஸ்பெண்ட்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பெண் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் கீழ் ஏராளமான அங்காடிகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சேமிப்பு கணக்கு, நகை அடமானம் டெபாசிட் போன்ற பணிகளும் இங்கு நடந்து வருகிறது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு செயலாளராக செல்வி கோகிலாம்பாள் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு வந்த பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகையை வழங்காமல், போலியாக கையொப்பம் போட்டு கையாடல் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வி கோகிலாம்பாள் தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு சங்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க தலைவர்அன்பழகன் கூறுகையில், சங்கத்தின் செயலாளர் (பொறுப்பு) செல்விகோகிலாம்பாள் சங்கத்தின் உறுப்பினர் காந்திமதி என்பவருக்கு 2018-19 ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.40 ஆயிரத்து 898 ரொக்கத்தை அவரது சேமிப்பு கணக்கில் மட்டும் வரவு வைத்து உரியவருக்கு வழங்காமல், வழங்கியது போல போலியான பணம் எடுக்கும் சீட்டு தயார் செய்து அதில் போலி கையொப்பம் இட்டு நிதி கையாடல் செய்துள்ளார். செல்விகோகிலாம்பாளை ஜூன் 20ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி