முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பூண்டிகலைச்செல்வன் படத்திற்கு திமுகவினர் மரியாதை

 

முத்துப்பேட்டை, நவ.18: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் 16-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்து பூண்டி கலைச்செல்வன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதா மனோகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கிளை கழக பொறுப்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோல முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தது பூண்டி கலைச்செல்வன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம் கலந்து கொண்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் திமுகவினர் முன்னாள் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்