முத்துப்பேட்டை அருகே வீரன்வயலில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

முத்துப்பேட்டை,நவ.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வீரன்வயல் கிராமத்தில் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத் துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கோமாரி நோய் தடுப்பு+சி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் துவக்கி வைத்தார்.

முகாமில் 600க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவகுழுவில் இடும்பாவனம் டாக்டர் மகேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் ஜெகநாதன், முருகேஷ், நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வீரமணி, மகாலட்சுமி, மாதவன், பிரசன்னா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை