முத்துப்பேட்டை அரசு பள்ளியில் ரெட்கிராஸ் தினம்

முத்துப்பேட்டை,மே9: ரெட்கிராஸ் அமைப்பை தோற்றுவித்த ஹென்றி டூனான்ட் பிறந்த நாளான மே 8-ம் தேதி உலக ரெட் கிராஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ரெட்கிராஸ் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். ஜுனியர் ரெட்கிராஸ் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஹென்றி டூனான்ட் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவகுமார், ராமசாமி, ரெட்கிராஸ் ஆயுள் உறுப்பினர்கள் செல்லப்பா, அம்பிகா, விஜயலட்சுமி மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ரெட்கிராஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்