முத்துப்பேட்டையில் ₹10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்

திருவாரூர், மார்ச் 5: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறப்பு விழா மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசுகையில்,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். அடுத்து, பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும். மென்பொருளுடன் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு திட்டத்தின்கீழ் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மூன்று பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1642 மேசை கணிணிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்