முதுகுளத்தூர் அரசு பள்ளியில் தீயணைப்பு துறை செயல் விளக்கம்

சாயல்குடி, ஜூலை 4: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சார்பில் செயல் விளக்கம் நடைபெற்றது. தாசில்தார் சடையாண்டி தலைமை வகித்தார். முதுகுளத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சங்கர், பொறுப்பு தலைமை ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.

மாணவர்கள் முன்னிலையில் தீ விபத்து நேரத்திலும், புயல், கனமழை,வெள்ளம், போன்ற பேரிடர் காலத்தில் தங்களையும், உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இதனைப் போன்று அவசர காலத்தில் மற்றவர்களையும், கால்நடை போன்றவற்றை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்.

மேலும் வீட்டு சமையல் மற்றும் இதர தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பாக அணைப்பது மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது குறித்து செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்கள். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை