முதல் வெளிநாட்டு பயணம் இங்கி. ராணி இறுதி சடங்கில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் ஜனாதிபதி முர்மு கலந்து கொள்வார் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உட்பட உலக முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ராணி மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 12ம் தேதி இங்கிலாந்து தூதரகத்துக்கு நேரில் சென்று இந்தியாவின் இரங்கலைத்  பதிவு செய்தார். இது தவிர, கடந்த 11ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ராணியின் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணியின் இறுதி சடங்கில் ஜனாதிபதி முர்மு கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதற்காக, முர்மு வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாள் பயணமாக லண்டன் செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் அவர் செல்லும் முதல் வெளிநாடு பயணம் இதுவாகும்.* மோடி போகாதது ஏன்?சமீபத்தில் டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட ராஜ்பாதையை, ‘கடமை பாதை’ என்று பெயர் மாற்றம் செய்து, பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில் அவர் பேசுகையில், ‘ராஜ்பாத் அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளது. இதை மாற்றவே கடமை பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய இந்தியாவுக்கான தொடக்கம்’ என்று கூறினார். இங்கிலாந்தை விமர்சித்து பேசிய காரணத்தால், ராணியின் இறுதிச்சடங்கில் மோடி கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு