முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்: இரவு 10.30க்கு தொடக்கம்

சவுத்தாம்ப்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 10.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து  சென்றுள்ள இந்திய அணி  கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து, தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட  டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல்  ஆட்டம் சவுத்தாம்ப்டனில்  இன்று  நடக்கிறது. தொடர்ந்து 2வது ஆட்டம் பர்மிங்காமிலும், 3வது ஆட்டம் நாட்டிங்காமிலும் நடைபெற உள்ளன. சில நாட்களுக்கு முன்பு  நடந்த டி20 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்தது. அந்த தொடரில் விளையாடிய இஷான், சாம்சன், ஹூடா, கார்த்திக், அக்சர், ஹர்ஷல், புவனேஷ்வர், ரவி  பிஷ்னோய், சூர்யகுமார் ஆகியோருடன், கொரோனாவில் இருந்து மீண்ட கேப்டன் ரோகித், சாஹல் ஆகியோரும் களமிறங்குவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். முன்னாள் கேப்டன்  கோஹ்லி, ஷ்ரேயாஸ், பன்ட், ஜடேஜா, பும்ரா  ஆகியோர் அடுத்த 2 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளனர். டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த இயான் மோர்கன் ஓய்வுக்கு பிறகு, ஜோஸ் பட்லர் தலைமையில் முதல் முறையாக இங்கிலாந்து களம் காண்கிறது.  சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஐபிஎல் நாயகன் பட்லர், டேவிட் மலான், லிவிங்ஸ்டன், ஜேசன் ராய், கிறிஸ் ஜார்டன், தைமல் மில்ஸ், மொயீன் அலி ஆகியோர் அதிரடி காட்ட காத்திருக்கிறார்கள். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர், ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு ஒத்திகையாக இருக்கும்….

Related posts

இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் பட்டம் வென்றார்

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கான்-நியூசி பலப்பரீட்சை