முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் டிரோன் பறக்க தடை: ¡கனரக வாகனங்கள் நகரில் நுழைய தடை ¡எஸ்பி சுதாகர் உத்தரவு

காஞ்சிபுரம், செப்.14: காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடக்க விழாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகிறார். இதற்காக 3 ஆயிரம் போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதித்து, மாநகரில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்துள்ளாதாகவும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி, நாளை (நாளை) கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதனால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பாதை மற்றும் மாநகர் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று வழிப்பாதையாக கலியனூர், செங்கல்பட்டு, ஒலிமுகமது பேட்டை வழியாக வந்தவாசி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து