முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி

திசையன்விளை, ஜூலை 7: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளை இளைஞரணி சார்பில் தம்புலிங்கேஷ்வர் கோவில் வளாகத்தில் ஒருநாள் மின்னொளி கைப்பந்து போட்டி நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் நெல்சன்ராஜா வரவேற்றார். தமிழக சபாநாயகர் அப்பாவு வீரர்களை அறிமுகம் செய்து வைத்து, கைப்பந்து போட்டியை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த வீர விளையாட்டுகள் கபடி, கைப்பந்து போன்றவை. கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்த தால் மதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெறும் நிலை இருந்தது. தற்போது தாராளமாக விளையாட்டு போட்டிகள் எவ்வித இடையூறும் இன்றி நடத்தும் நிலை உள்ளது’ என்றார். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடியது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம்கிஷோர் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் அலெக்ஸ், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் கெனிஸ்டன், இசக்கிபாபு மற்றும் பொறிகிளி நடராஜன், சுவிஷ் சாலமோன், பொன்இசக்கி, கஸ்தூரிரெங்கபுரம் பாலன், ராதாபுரம் அரவிந்த், அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, கே.டி.பி.ராஜன், சங்கர், ராஜா, சுந்தரலிங்கம், மணலி பாலமுருகன், அஜித் தேவஆசீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை