முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனை

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால், கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 55 விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து கொண்டனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொடந்து, 3 நாட்களாக தக்காளி விலை ரூ.110வரை உயர்ந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 79 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். இதுபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு கடும் முயற்சி எடுத்து ஒரு கிலோ நாட்டு தக்காளி 55க்கும் பெங்களூரூ தக்காளி 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 110க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் நேற்று ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், இல்லதரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்