முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். அப்போது ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். இதேபோல், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் உதவிகளை செய்து வருகின்றனர். திமுக சார்பில் ரூ.1 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, ஜெ.ஜி.பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதாரணி, ஆர்.கணேஷ், செய்தி தொடர்பாளர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்….

Related posts

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை