முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டி: சுவேந்து அதிகாரி வேட்பு மனு தாக்கல்

ஹால்டியா: மேற்கு வங்கத்தில நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த டிசம்பரில் அக்கட்சியின் முக்கிய தலைவரும் அமைச்சருமான சுவேந்து அதிகாரி விலகி, பாஜவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில் சுவேந்துவின் தொகுதியான நந்திகிராமில் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதற்காக கடந்த புதன்கிழமை மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நந்திகிராம் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுவதற்ாக சுவேந்து அதிகாரி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஹால்டியாவில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில் சுவேந்து வேட்பு தாக்கல் செய்தார். …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை